வி. ஜி. மருத்துவமனை மற்றும் கல்லூரி நிறுவனர் தினவிழா

83பார்த்தது
கோவை வி. ஜி. மருத்துவமனை மற்றும் வி. ஜி. பாராமெடிக்கல் கல்லூரி நிறுவனர் தினவிழா ஐ. எம். ஏ. அரங்கில் நடைபெற்றது. வி ஜி. மருத்துவமனை குழுமங்களின் தலைவர் டாக்டர் வெங்கடேசன், தலைமையில் நடைபெற்ற , விழாவில் டாக்டர் ரம்யா ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மருத்துவ சேவையில் வி. ஜி. மருத்துவமனையின் பல்வேறு சேவைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வி. ஜி. மருத்துவமனை மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக வி. ஜி. குழுமங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் மருத்துவர்கள் நந்தினி, விஷ்ணு குமார் ஜெயராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி