கோவை சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி போகம்பட்டி இங்கு விவசாய நிலங்கள் அதிகம் உள்ளது. இந்த விவசாய நிலங்களில்
காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், விவசாயிகள் வேளாண்மை துறை மற்றும் வனத்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
காட்டுப் பன்றிகளை பிடித்து விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த பயிர்கள்
காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாழை, தென்னை போன்ற நீண்ட கால பயிர்களும் சேதமடைந்துள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.