மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு வரும் மே 4ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், இன்று (பிப்.,7) முதல் மார்ச் 7ஆம் தேதி இரவு 11.50 மணி வரை, neet.nta.nic.in. என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். 2025 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு எந்த விருப்பக் கேள்விகளும் இருக்காது, மேலும் கோவிட் சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கூடுதல் நேரமும் மாற்றப்படுகிறது.