சப் ஜூனியர்களுக்கான பூப்பந்தாட்டம் தேர்வு திறன் போட்டி

73பார்த்தது
கோவை மாவட்டம் பூப்பந்தாட்டம் கழகம் சார்பில் கோவை மாவட்ட அளவிலான 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கான சப் ஜூனியர் பூப்பந்தாட்டம் தேர்வு திறன் போட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி. இராமசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.

கோவை மாவட்டத்திலிருந்து மாணவ மாணவியர்கள் சுமார் 60 பேர் இத்தேர்வு திறன் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், தகுதி பெரும் மாணவ, மாணவியர்கள் 10 பேர் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் திருவடைமருதூரில் நடைபெறும் மாநில பட்டைய போட்டிக்கான தேர்வில் விளையாட உள்ளனர்.

மாநில பட்டைய போட்டித் தேர்வில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகுதி பெரும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து வெற்றி பெறும் அணிகள் அரியானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான பட்டைய போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இதில் கோவை மாவட்டம் பூப்பந்தாட்டம் கழகம் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் மார்சல், பொருளாளர் கிருஷ்ணசாமி, துணை தலைவர் மோகன காந்தி, துணைச் செயலாளர்கள் சதீஷ் மற்றும் முரளிதரன் மற்றும் தேசிய விளையாட்டு வீரர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் தேர்வு திறன் போட்டி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி