சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆய்வு

75பார்த்தது
சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆய்வு
கோவை அரசு மருத்துவமனையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி அம்மையாரின் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு குறித்து நேற்று ஆய்வு செய்தனர். இது குறித்து சங்கத்தின் செயலாளர் சுதா நிருபர்களிடம் கூறுகையில், “கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான வசதிகள் குறித்து கண்டறிய ஆய்வு செய்தோம்.

இதில், பெரும்பாலான இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள் தூய்மையாக இல்லை. முகப்பு பகுதி மட்டும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. நோயாளிகள் அதிகம் வந்து செல்லும் நிலையில் கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஒப்பந்த பணியில் உள்ள நீண்ட கால தூய்மை பணியாளர்கள், காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சூலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார மையங்களில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கட்டிட பராமரிப்பு முறையாக இல்லை. புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு, நுரையீரல் சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

தொடர்புடைய செய்தி