ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியில் ஹிஜ்ரத் கண்காட்சி

55பார்த்தது
ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி மாணவிகள் நடத்தும் ஹிஜ்ரத் கண்காட்சி கரும்புகடை பகுதியில் மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வான ஹிஜ்ரத் குறித்தும், அந்நிகழ்வு நமது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் மாடல்கள் மூலம் எளிமையாக விளக்கிட ஹிதாயா இஸ்லாமியக் கல்லூரி மாணவிகள் கண்காட்சி நடத்துகின்றனர்.

இக்கண்காட்சி ஆகஸ்ட் 1, 2ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்காகவும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி பெண்களுக்காகவும் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் கல்லூரி மாணவிகள் ஹிஜ்ரத் கண்காட்சியை அழகுற பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். குறிப்பாக முன்புள்ள காலகட்டத்தில் மனிதர்கள் மூடநம்பிக்கையில் இருப்பதையும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் எடுத்துரைத்தனர் மேலும் இன்றைய காலகட்டத்தில் ஜாதி, மதம், இனம் போன்றவற்றில் மனிதர்கள் அதிக அளவில் மூடநம்பிக்கை கொண்டுள்ளதை அன்றைய கால கட்டத்தில் நபிகள் நாயகம் எவ்வாறு மனிதர்களை வழிநடத்தி சென்றார்கள் என்பதை இக்கண்காட்சி மூலம் மாணவிகள் எடுத்துரைத்தனர்.

இக்கண்காட்சிக்கு, அப்பகுதியை சுற்றி உள்ள பல்வேறு பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வருகை தந்து கண்காட்சியைப் பார்த்து பயன்பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி