கோவை: குருத்தோலை ஞாயிறு விழா -பவனி வந்த கிறிஸ்தவர்கள்

67பார்த்தது
கோவை புறநகரில் குருத்தோலை ஞாயிறு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஓசானா பாடல்கள் பாடியும், குருத்தோலைகளை கையில் ஏந்தியும் பவனி வந்தனர்.
கிறிஸ்தவர்களின் ஐந்தாவது வார தவக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு பக்திப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து பாஸ்கா பண்டிகையை முன்னிட்டு ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தபோது, யூத மக்கள் அவரை குருத்தோலைகள் மற்றும் ஒலிவ இலைகளால் வரவேற்றதை நினைவுகூரும் விதமாக இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செயின்ட் சார்லஸ் தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் ஏராளமான விசுவாசிகள் கலந்து கொண்டனர். காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, விசுவாசிகள் குருத்தோலைகளை கையில் ஏந்தி, தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்ற வாழ்த்துப் பாடல்களைப் பாடியவாறு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பவனி சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தனர்.
தேவாலய பேராயர் கிருபை லில்லி இது குறித்து கூறுகையில், இயேசு கிறிஸ்து அன்பைப் போதிக்கவே கழுதை மீது பயணித்தார். அவரது பணிவும், அன்பும் தான் இந்த நிகழ்வின் முக்கிய செய்தி. உலக மக்களுக்கு அன்பை எடுத்துச் செல்லும் விதமாக ஆண்டுதோறும் இந்த விழா அனுசரிக்கப்படுகிறது, என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி