கோவை அவிநாசி சாலையில் உள்ள தெக்கல்தானில் லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324C சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் இன்று நடைபெற்றது. இப்பேரணியானது
வி. கேர் சிஸ்டம் மற்றும் லயன்ஸ் ரீஜன் சேர்பர்சன் T. வெங்கடகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து, லயன்ஸ் ரீஜன் சேர்பர்சன் T. வெங்கடகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324C சார்பாக இந்த வருடம் எங்களுடைய கவர்னரின் கனவு திட்டமான Mammo for mom என்ற மார்பக புற்றுநோய் கண்டறியும் விழுப்புணர்வு பேருந்தை பொது மக்களுக்கு இலவசமாக தரவுள்ளதாக தெரிவித்தார். அதிகமான பொதுமக்களுக்கு மார்பக புற்று நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள், அதற்காக லயன்ஸ் மாவட்டம் சார்பாக பொது மக்களுக்கு இலவச பேருந்து தர உள்ளதாகவும் அதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றார்.
இதில் மாவட்ட ஆளுநர் Dr. நித்யானந்தம், முதல் துணை மாவட்ட ஆளுநர் ராஜசேகர், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் செல்வராஜ், GAT ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால், ஜோன் சேர் person dr. ராமலிங்கம், ஜோன் சேர்மேன்கள் பால்ராஜ், சந்திரசேகர், கர்ணன், GMT முத்துவேல், கேன்சர் district சேர் பர்சன் மோகனாராம்குமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் ராம்குமார் மற்றும் V3 ஈவண்ட் விவேகாயோகராஜ் மற்றும் குழுவினர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.