அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

70பார்த்தது
அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பில் 10, 12ம் வகுப்பில்
அதிக மதிப்பெண்
பெற்ற 125 மாணவர்களுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா பேரூர் அருந்ததியர் சமூக மடத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் அருந்ததிய சமூக பொது நல அறக்கட்டளை தலைவர் எஸ். செல்வகுமார் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் திருமலைசாமி, கவுரவ ஆலோசகர்கள் நடராஜன், மருதாசலம், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கே. மாறன் விழா தொகுப்புரை ஆற்றினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்பு உரை ஆற்றினார்.
விழாவை
பொள்ளாச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். தியாகராஜன்
குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு
துணை மாநில வரி அதிகாரி ஆர். கே. ஜெயஸ்ரீ, பாரதியார் பல்கலைக் கழக ஐ. நா. சிறப்பு பிரதிநிதி காந்திய வேந்தன், வேடப்பட்டி கிராம கல்வி பாதுகாவலர் திருமுர்த்தி ஆகியோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
பேச்சாளர் ஸ்ரீராம் மாணவர்களுக்கு கல்வி அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் வெள்ளிங்கிரி, நாகராஜ், சுந்தர், சுகுமாரன், ரயில்வே மேகநாதன், குருநாதன், அன்பு செல்வன், ரங்கநாதன், சரண்ராஜ், வேலன், ஸ்ரீராம், இருகூர் பழனிசாமி, ரவிகுமார், ஆறுச்சாமி, சின்னசாமி, வேல்முருகன், ஈஸ்வரன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி