அன்னூர்: நொச்சி தாவரம் பயிரிட வேளாண் துறை அழைப்பு

54பார்த்தது
அன்னூர்: நொச்சி தாவரம் பயிரிட வேளாண் துறை அழைப்பு
மூலிகை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட நொச்சி செடியை விவசாயிகள் பயிரிட, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை நேற்று (அக்.,15) அழைப்பு விடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நொச்சி செடி, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. எங்கும் இயல்பாய் கிடைக்கக்கூடிய வெண்நொச்சி பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.

இதன் இலை, வலி போக்குதல், சிறுநீர் பெருக்குதல், நோய் நீக்கி உடல்நலம் பேணுதல், குடல் புழு நீக்குதல் ஆகிய குணங்களைக் கொண்டது. நொச்சியின் பட்டை ஜுரம் போக்கி, உடலை வலுவாக்கவும், சளி அகற்றி, சிறுநீர் பெருக்கவும் பயன்படுகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட நொச்சியை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறலாம் எனவும், இது தொடர்பான நாற்றுகள் பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி