7-வது எலக்ட்ரோடெக் 2024-ம் கண்காட்சி நடைபெற உள்ளது.

67பார்த்தது
கொடிசியா கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்பொழுது அவர் கூறும் போது

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வருகின்ற 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 7-வது எலக்ட்ரோடெக் 2024-ம் கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நிதி சேவை மற்றும் ஆட்சித்துறை அமைச்சர் சுமில் தத் போலோ பங்கேற்கிறார்.
இந்த கண்காட்சியில் வர்த்தகம் செய்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பொதுமக்கள் பார்வைக்காக மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

மேலும் இந்தியா மற்றும் அயல் நாட்டிலிருந்து 25, 000-க்கும் மேற்பட்ட நபர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து வர்த்தகம் செய்ய வர இருப்பதாக தெரிவித்தனர். இந்த கண்காட்சி மூலம் சுமார் 800 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என கண்காட்சி ஏற்பட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 12-ம் தேதி மட்டும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு 2 மணி முதல் கட்டணம் செலுத்தி பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒரு நபருக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி