கோவை இஸ்கானில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

80பார்த்தது
கோவை இஸ்கானில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
கோவை இஸ்கானில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஸ்ரீ ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இன்று காலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள், பாலகோபாலருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு வழிபாடுகள், கோபூஜை, பகவான் ஜெகன்னாதருக்கு தீபராதனை, கலைநிகழ்ச்சிகள், மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பாட்டுப் போட்டி, குழந்தைகள் பங்கேற்கும் நாடகம், பரதநாட்டியம் போன்ற போட்டிகள் நடைபெற்றது. மாறுவேடப் போட்டியில், ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டனர். இஸ்கான் அமைப்பின் மண்டலச் செயளாலர் தவத்திரு பக்தி விநோத சுவாமி மகராஜ் தலைமையில் நடைபெற்றது. அனைத்து மக்களும் நலமாக வாழவும், கோவை சுபிட்சமடையவும் சிறப்பு ஹோமம் ஒன்று செய்யப்பட்டது. 1008 கலசாபிசேகம்
1008 கலசங்களில், பல புனித நதிகளிலிருந்து கொண்டு வந்த நீரினால், பாலகோபாலருக்கு அபிசேகம் செய்யப்பட்டது. பல ஆன்மீக தலைப்புகளில் மூத்த பக்தர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினர். சிறப்பு பட்டிமன்றம், ஆன்மீக கருத்தரங்கம், குழந்தைகள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, உரியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி