ரூ. 2. 49 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு

51பார்த்தது
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பீளமேடு, சிங்காநல்லூர், சங்கனூர் பகுதிகளில் ரூ. 2. 49 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் , கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி. ப. ராஜ்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன். துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கதிர்வேல். இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, பார்த்திபன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், மாநகர தலைமைப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you