டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை

57பார்த்தது
டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை
கோவை அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பாளையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வைர மூர்த்தி (40). டிரைவர். நேற்று வைர மூர்த்தி சித்தாபுதூர் அருகே மகாலட்சுமி நகரில் எஸ் பெண்ட் வளைவில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 நபர்கள் காரில் வந்தனர். அதில் இருந்து இறங்கிய ஒரு நபர் வைர மூர்த்தியின் கைகளை பின்னால் கட்டிக் கொண்டார்.  
ஒரு நபர் கத்தியை எடுத்து மிரட்டி வைர மூர்த்தி சட்டை பாக்கெட்டில் இருந்த பணம் 4500 எடுத்துக்கொண்டு மிரட்டி விட்டு சென்றுவிட்டனர். இது குறித்து வைரமூர்த்தி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பணம் பறித்து காரில் தப்பிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி