கோவை நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றதையடுத்து , கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் Ex mla வழிகாட்டுதலில் பீளமேடு 2 பகுதி கழகம் 48 வது வட்டக்கழகம் சார்பில் VKK மேனன் சாலை பகுதிகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர்.
இந் நிகழ்வில், பகுதிக்கழக செயலாளர் மா. நாகராஜ் வட்டக்கழக செயலாளர் சசிக்குமார், பொரியாளர் அணி அமைப்பாளர் நா. பாபு மகளிர் அணி துணை அமைப்பாளர் பிரியா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்