திமுக மாவட்ட செயலாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தி

68பார்த்தது
திமுக மாவட்ட செயலாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தி
நா. கார்த்திக்exMLA அறிக்கையில், தமிழ்நாடு முதல்வர் அவர்களின்‌‌ தலைமையில் நடைபெற்று‌ வரும், எல்லோருக்கும் எல்லாம்" எனும் திராவிட மாடல்‌ பொற்கால‌ ஆட்சியில், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழகத்தின் விடிவெள்ளி, திராவிட நாயகன் அவர்கள் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1, 000 வழங்கும் திட்டம்,
கல்லூரிப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1, 000 வழங்கும் "புதுமைப் பெண் திட்டம். மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் , கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி, 1. 5 இலட்சம் விவசாயிகளுக்கு, விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டம். பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டம். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம். நம்மைக் காக்கும் 48 மருத்துவத் திட்டம். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைத் திட்டம். பிறக்கின்ற 2024, புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி,
மகிழ்ச்சி மற்றும் வளம் ஆகியவை கிடைக்கட்டும்.
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும், பொதுமக்கள் எல்லா‌ வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கோவை மாநகர் மாவட்டச் செயலாளர்,
நா. கார்த்திக் Ex. MLA. தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி