இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 80வது வார்டுக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தேசியக்கொடி ஏற்றி வைத்து பொது சுகாதாரக் குழு தலைவர் பெ. மாரிசெல்வன் , மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
கெம்பட்டி காலனி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீ கலா மற்றும் வார்டு செயலாளர் நா. தங்கவேலன். பகுதி துணை செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன், என். ஜே. முருகேசன் மற்றும் பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் கழக நிர்வாகிகள் என இந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு 78வது சுதந்திர தின விழாவை போற்றினர்.