கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் குடியிருப்பு பொது நலச்சங்கம் சார்பில் 6 -வது ஆண்டாக சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி வழங்கும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த 5, 000 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, இப்பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை - எளியோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், ரம்ஜான் பண்டிகையின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படும்
இந்த விழாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பிரியாணி வழங்கினர். இந்த சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி விருந்து, கோவையில் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.