கோவை க. க சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொருளாளர் சஜிஷ்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடையே உரையாற்றுகையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒழுக்கம், ஒருமைப்பாடு, கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். கல்லூரியின் முதல்வர் கல்பனா அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் தேச பக்தி உரை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய மாணவர் படை அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சிறப்பு விருந்தினர் மரக்கன்றுகளை நடவு செய்தார். தேசிய கொடியின் வரலாற்று மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடல் கல்வி ஆசிரியர் ஜெயபிரகாஷ் செய்திருந்தார்.