சிறுமுகை அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

82பார்த்தது
சிறுமுகை அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!
கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது குறித்து சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த சிறுமுகை காவல்துறையினர் மற்றும் லைப் காட் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மிதந்து வந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தின் அடையாளத்தை கண்டறியவும், மரணத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி