விநாயகப் பெருமான் தடைகளை நீக்குவதோடு, அதிர்ஷ்ட தெய்வமாக அறியப்படுகிறார். அதனால்தான் எந்த ஒரு புதிய வேலை அல்லது வியாபாரத்தை தொடங்கும் முன் விநாயகரை வணங்கி, தடையின்றி காரியங்கள் சுமூகமாக நடக்க வேண்டுகின்றனர். இதில், மேஷம், மிதுனம், மகரம் ஆகிய ராசியினருக்கு வாழ்நாள் முழுவதும் விநாயகரின் அருள் கிடைக்கும். அனைத்து பிரச்சனைகளும் இந்த விநாயகர் சதுர்த்தியுடன் நீங்கும். தொழில், கல்வி போன்ற துறைகளிலும் சிறப்பான பலன் பெறுவார்கள்.