நாளை (செப்.7) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்கள் பல உள்ளன. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர், பொள்ளாச்சியில் உள்ள ராஜகணபதி, காஞ்சிபுரத்தில் உள்ள சங்குபாணி விநாயகர், கோவை மாவட்டம் புளியகுளத்தில் அமைந்துள்ள முந்தி விநாயகர் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்ய மறவாதீர்கள்.