பொய்யான பாலியல் புகாரில் போக்சோ நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் பெண்ணின் வீடு புகுந்து வன்கொடுமை செய்ததாக 2018ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்தது. திருமணத்திற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக முன்னாள் காதலன் மீது தங்கையை வைத்து பாலியல் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.