குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரையும், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.