செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு அருகே சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று, பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஏரியில் விழுந்தன. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், ஏரியில் விழுந்த சிலிண்டர்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். இதற்கிடையே, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.