கோவை: எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் சடலமாக கண்டெடுப்பு!

72பார்த்தது
கோவை மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் நேற்று காலை அரசுப் பள்ளி ஆசிரியை பத்மா (56) எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழுக்குப்பாறை அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்த பத்மா நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை.
மாறாக, அவரது வீடு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை எரிக்கும் இடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் இருந்ததால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்மாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பத்மா பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மேலும், பத்மாவின் செல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி