கோவை: விமான நிலையத்தில் பெண்ணால் பரபரப்பு!

68பார்த்தது
கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில் இருந்து வெளியே வந்த ஒரு ஆணும் பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண் தனது கணவனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, என்னை திருமணம் செய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஹனிமூன் செல்கிறாயா? என்று கதறினார். அந்தப் பெண்ணின் கணவரின் உறவினர் ஒருவர் சமாதானம் செய்ய முயன்றபோது, அவரது கன்னத்தில் அறைந்து, சட்டையைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தடுக்க முயன்றபோது, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த பயணிகளைப் பார்த்து, இத்தனை பேர் இருந்தும் அவனைப் பிடிக்க முடியவில்லையா? என்று கோபத்துடன் கேட்டார்.
இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி