கோவை: பெண்ணை மிரட்டும் நிதி நிறுவன ஊழியர்- வீடியோ வைரல்!

58பார்த்தது
கோவை தொண்டாமுத்தூரில் கணவர் இறந்த நிலையில், வீட்டுக்கடன் வாங்கிய பெண்ணை, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரவில் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுளா என்ற பெண் 5 ஸ்டார் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 4 லட்சம் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். அவரது கணவர் ரவி சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். தவணைத் தொகை செலுத்தாததால், நிதி நிறுவன ஊழியர்கள் மஞ்சுளாவின் மகன் விஜய்யை தொலைபேசியில் ஆபாசமாக பேசியுள்ளனர்.
மேலும், நேற்று முன் தினம் இரவு வீட்டு வாசலில் அமர்ந்து, இரவு 10 மணிக்கு பிறகும் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளையும் மீறி, நீதிமன்றத்தை நாடாமல், தனிமையில் இருக்கும் பெண்ணை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும், காவல்துறையும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி