வாலிபர் அடித்து கொலை; 2 பேருக்கு ஆயுள் தண்டனை

566பார்த்தது
வாலிபர் அடித்து கொலை; 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை ஒண்டிப்புதுார் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி(33). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி ஒண்டிப்புதுார் மேம்பாலம் கீழ் பகுதியில் மது குடிக்க தனது மொபட்டில் சென்றார். அப்போது அங்கு துாத்துக்குடியை சேர்ந்த ஆனந்தகுமார்(27), மற்றும் ஒண்டிப்புதூரை சேர்ந்த டேவிட் என்கிற அந்தோணிராஜ்(27) ஆகியோர் இருந்தனர். அதில் ஆனந்தகுமார், ரத்தினசாமியிடம் மொபைல் போன் கேட்டார். அதற்கு அவர் தர மறுத்து விட்டார். உடனே டேவிட், ரத்தினசாமியின் மொபைல் போனை பறித்து ஆனந்தகுமாரிடம் கொடுத்தார். ரத்தினசாமி தனது போனை ஆனந்தகுமாரிடம் இருந்து வாங்கி அவரை தள்ளி விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் மற்றும் டேவிட் அங்கிருந்த மரகட்டையை எடுத்து ரத்தினசாமியை தாக்கினர். பின் அவரிடம் இருந்த ரூ. 650 மற்றும் மொபைல் போன் மற்றும் அவர் வந்த மொபட்டை திருடி தப்பி சென்றனர். பலத்த காயம் அடைந்த ரத்தினசாமி உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார் மற்றும் டேவிட்டை கைது செய்தனர். இந்த வழக்கு 3வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா கொலையாளிகள் இருவருக்கும் ஆயுள் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி