கோவை கணபதி - சங்கனூர் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர் கேரளா கோட்டயத்தை சேர்ந்த பார்த்தசாரதி(32), ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணவேனி(32), பீளமேட்டை சேர்ந்த ரஞ்சனா(23), கோழிக்கோட்டை சேர்ந்த ஜோமல்(33) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராமச்சந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.