பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க கோரிக்கை

55பார்த்தது
பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க கோரிக்கை
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய பருத்தி கூட்டமைப்பின் (Indian Cotton Federation) 45வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று(செப்.29) RS புரம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜே. துளசிதரன் 2024-25 ஆம் ஆண்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டத்தில் பேசிய ஜே. துளசிதரன், கடந்த நிதியாண்டு ஜவுளித் துறைக்கு மிகவும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார். தொழில்துறையும், விவசாயிகள் நலனும் செழிக்க பருத்தி விளைச்சல் மேம்பட வேண்டும் என்றும், 2024-25 காலகட்டத்தில் பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், பருத்தி மீதான இறக்குமதி வரி காரணமாக இந்தியாவில் பருத்தியின் விலை உலக அளவில் உள்ள விலையை விட அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது விவசாயிகளுக்கும் தொழில்துறைக்கும் பாதகமானது என்பதால், அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில் வளர்ச்சிக்கு மூலப்பொருள் பாதுகாப்பு மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் நிதி அவசியம் என்றும் அவர் கூறினார். பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்பது ICF-ன் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி