கோவை ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்தில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று (செப்.,14) மதியம் 2 மணி அளவில், கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.
இறந்த பெண் பச்சை கலர் சுடிதார் மற்றும் மஞ்சள் கலர் பேண்ட் அணிந்துள்ளார். நிறம் சிவப்பு வட்டமான முகம் கொண்டவர். இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் இருக்கும் என்றும், இவரது பிரேதத்தை காவல் உதவி ஆய்வாளர் திருமதி மங்கையர்க்கரசி கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இவரைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் 0422 -2300043 என்ற எண்ணில் கோயம்புத்தூர் ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.