பயண சீட்டு இல்லாமல் பயணம்; ரூ.1.67 கோடி அபராதம் வசூல்

81பார்த்தது
பயண சீட்டு இல்லாமல் பயணம்; ரூ.1.67 கோடி அபராதம் வசூல்
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களை கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 13, 553 பேரிடமிருந்து ரூ. 1, 01, 87, 158 அபராதமாக வசூலிக்கப்பட்டது. ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 14, 590 பேரிடமிருந்து ரூ. 64, 81, 870 வசூலிக்கப்பட்டது. மேலும், ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 58 பேரிடமிருந்து ரூ. 44, 026 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மொத்தமாக ரூ. 1, 67, 13, 054 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரயில்வே துறையின் வருவாய் இழப்பை தடுக்க முடியும் என்றும், பயணிகள் முறையான பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என்றும் ரயில்வே இன்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி