குழந்தைகளையும் விட்டு வைக்காத உடல் பருமன் குறைபாடு

57பார்த்தது
V G M மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவரான வி. ஜி. மோகன்பிரசாத், பேட்டி

நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இது பன்மடங்கு உயர்ந்திருக்கின்றது. 11% முதல் 30 % அதிகரித்து இருக்கின்றது.

கிராமப்புறத்தை விட நகர்புறத்தார் உடல் பருமனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். துரித உணவு உட்கொள்ளுதல், நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருத்தல், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட நவீன வாழ்வியல் முறையால், உடல் பருவனால் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்த ஆரம்பித்திருக்கின்றனர்.

கொழுப்பு படிந்த கல்லீரல், ஹார்ட் அட்டாக் , உடலில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் உடல் உபாதைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இளம் வயதினரையும் பாதிக்க ஆரம்பித்து இருக்கின்ற இந்த உடல் பருமன் பிரச்சினை, குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. வழக்கமாக ஒரு குழந்தை சிகிச்சைக்கு வந்த இடத்தில், சமீப காலமாக ஐந்து குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்தி