கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (73). இவர் கடந்த 5ம் தேதி சரவணம்பட்டி அம்மன் கோயில் பஸ் நிறுத்தத்தில் இருந்து கணபதிக்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் நைசாக அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து திருடி சென்றுவிட்டார். நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து சரவணம்பட்டி போலீ சில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக் குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.