மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை டாடாபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையிலும், எம்பி ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்ட்ட ஆர்ப்பாட்டத்தில் பாசிச பாஜக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.