உக்கடம்: சமீபத்தில் திறக்கப்பட்ட பாலத்தில் விரிசல்!

53பார்த்தது
கோவை உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, பேரூர், செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3. 8 கி. மீ நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில் அந்த புதிய பாலத்தில் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே விரிசல் ஏற்பட்டு பாலத்தில் ஒரு சில துகள்கள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தைக் கடந்து செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். அவசர கதியில் திறக்கப்பட்ட பாலம் என்பதால் பொதுமக்கள் பாலத்தில் பயணிக்க தயங்குவதாகவும் விளம்பரத்துக்காக அவசரத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் இதுபோல குளறுபடிகள் ஏற்பட்டு இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பெரிய சேதம் ஆகுவதற்கு முன்பே பாலத்தை பராமரித்து பொதுமக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் திமுக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி