ஜப்பானில் சிறுமி ஒருவர் கடந்த ஆக.31ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் இறந்த அந்த சிறுமியிடம் ஜப்பான் அரசு விசாரணையைத் தொடங்க உள்ளதை உங்களால் நம்ப முடிகிறதா? 17 வயதான அந்த சிறுமி 12ஆவது மாடியில் இருந்து குதித்த போது, கீழே நடந்து சென்ற சிகாகோ ஷிபா (32) என்ற பெண் மீது விழுந்தார். இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு பெண்ணை கொன்ற குற்றத்திற்காக அச்சிறுமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.