செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன், “ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்க சில மணி நேரங்கள் கூட ஆகலாம். புயல் கரைக்கு அருகில் வந்தாலும் விட்டு விட்டுதான் மழை பெய்யும். புயல் கரைக்கு அருகே வரும்போது அதனின் நகர்வு வேகம் சற்று குறைய வாய்ப்பு உண்டு" என பேட்டியளித்துள்ளார்.