மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் எக்ஸ் தள பதிவில், "மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது. மக்கள் பிரச்னையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் அவர்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.