மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். கோவையில் உரையாற்றிய முதல்வர், “பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத் வாழ்க்கையில் எப்பேர்பட்ட தடங்கல்களை சந்தித்து, எதிர்கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். பலவீனம் ஆகாமல், வீட்டுக்குள் முடங்கி விடாமல் தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய திறமையுடனும் வினேஷ் போகத் போராடி நாம் எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.