முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்கு உள்ளது. உங்களது உயர்கல்விக்காக ‘புதுமைப்பெண்’, ‘நான் முதல்வன்’ போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே, உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.