விருகம்பாக்கம் - Virugampakkam

சென்னை: 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..

சென்னை: 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. தமிழ்நாட்டில் நவ. 25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நவ 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் கவனம் செலுத்தி, அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 25 முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வீடியோஸ்


சென்னை
சென்னை: நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா? - அமைச்சர் காந்தி மறுப்பு
Nov 24, 2024, 14:11 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

சென்னை: நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா? - அமைச்சர் காந்தி மறுப்பு

Nov 24, 2024, 14:11 IST
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழக அரசு முற்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுவது உண்மைக்கு புறம்பானது என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் காந்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித் துறையினால் எவ்வித அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படவில்லை. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடித ந. க. எண். 26821/ஆர்-1/2024 நாள் 06. 11. 2024–ன்படி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என கண்டறிய மாநகராட்சிகள் மற்றும் மண்டல நகராட்சி வாரியாக ஆய்வு செய்து கேட்பு உயர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை தவிர) மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வாய்க்கு வந்தவாறு செவிவழிச் செய்திகளைக் கேட்டு, உரிய தரவுகள் ஏதுமின்றி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை சுய இலாபம் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தரம் தாழ்ந்த அரசியலில், கண்ணியமற்ற முறையில், மலிவாக ஈடுபடுவதை நான் வன்மையாக கண்டிப்பதுடன், அவர் இம்மாதிரியான நடவடிக்கைகளை இனிமேலாவது கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.