அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சாலை நெடுகிலும் தொண்டர்கள் கொடியசைத்து, மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம், தவில், பறை இசை முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர்.
விழாவில் பங்கேற்ற பழனிசாமி முதலில் எம்ஜிஆர் -ஜானகி ஆகியோரின் அறிய புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்த பழனிசாமி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜானகியின் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். ஜானகியுடன் திரைத்துறையில் பயணித்த ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு ஜெயசித்ரா, குட்டி பத்மினி ஆகியவரை கௌரவித்து நினைவு பரிசு வழங்கினார்.
பின்னர், AI தொழில்நுட்பம் மூலமாக அஇஅதிமுக தொண்டர்கள் முன்பு புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் தோன்றினார்.