வேளச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியில் இருந்து தரமணி நோக்கி செல்லும் 100 அடி சாலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக
போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சென்னை தெற்கு
போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ்குமார், அடையாறு போலீஸ் துணை கமிஷனர் பொன் கார்த்திக் ஆகியோர் தலைமையில்
போக்குவரத்து போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி வரை 100 அடி சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த தள்ளு வண்டிகள், பெட்டி கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மரப்பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.