சென்னை பெருங்குடி அருகே ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி தோற்றதைக் கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பெண் விவகாரத்தில் தாக்குதல் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நண்பனின் மனைவியிடம் தவறாகப் பழகிவந்ததால் ஜீவரத்தினம் (27) தாக்கப்பட்டுள்ளார். சிகிச்சையிலிருந்த அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து கைதான 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.