பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலம் கையகப்படுத்த அனுமதி

74பார்த்தது
பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலம் கையகப்படுத்த அனுமதி
பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147. 11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே வளத்தூர், தண்டலூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்டவை அழிக்கப்படும் எனக்கூறி பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147. 11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எடையார்பாக்கம் கிராமத்தில் 147. 11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி ஆணை வெளியிட்டது. நிலம் குறித்த பாத்தியத்தை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி