சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து அரியவகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏரிகள் குளங்கள் சதுப்பு நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் அக்டோபர் இறுதியில் வரத் தொடங்கும். நீர்நிலைகளில் அதிகரித்து காணப்படுவதால் மாதத்தில் தொடக்கத்திலேயே அரிய வகை பறவைகள் வர தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.