ரூ என்பது பெரிதானது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

75பார்த்தது
மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்” என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 'உங்களில் ஒருவன்' (Ungalil Oruvan) என்னும் பெயரில், திமுக அரசின் மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 16) வெளியான உங்களில் ஒருவன் பதில்கள் காணொலியில், “மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்” என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

அந்த வீடியோவில் முதல்வர் கூறியிருப்பதாவது, பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக்கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை அதில் ‘ரூ’-என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள். அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள்.

அவங்களே, பல பதிவுகளில் ரூ-என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் Rupees- என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி