புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை தடுக்கவும்: டிடிவி

69பார்த்தது
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என்று டி. டி. வி. தினகரன் கூறியுள்ளார்.

அ. ம. மு. க. பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம். பி ஹிபி ஏடன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் தி. மு. க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது ஒட்டுமொத்த கேரளமும் புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதை தெளிவு படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி